அவள்போலே பெற்றதென்ன?!

தென்றலிலே அசைந்தாடி
தேமதுர ஓசைத்தந்து
மின்னொளிரும் உருவினிலே
மிஞ்சுகின்ற மென்மையிலே
வண்ணமலர்க் கோலமென்ன!

இத்தனை வகைகளாய்
எத்தனை நிறங்களாய்
எத்தனை உருவங்களாய்
அழகான இயற்கைத்தாய்
அவள்போலே பெற்றதென்ன!

நித்தமும் நினைவூட்டும்
நிலையான மகிழ்ச்சிதனை
எப்படித்தான் புகழ்வதுவோ
எழிமலர்கள் கொள்ளைதனை
இனிமையாய்க் கண்டாலென்ன?!

Read Comments

1 comments:

சந்தானலட்சுமி said...

இயற்கையின் அழகு,
இனிமையின் அணைப்பு,
இலக்கியத்தின் அதிர்வு,
இதயத்தின் அசைவு, ...

:)