தமிழில் பேசுவோம்!
தமிழ்ப்பள்ளி செல்லாமல் - நீ
காண்வன்ட் ஸ்கூல் செல்கின்றாய்
அம்மா அப்பா இருக்கையிலே - நீ
மம்மி டாடி என்கின்றாய்
எளிதான ஒரு காரியத்தை - நீ
சின்னாங்காக முடிக்கின்றாய்
வானொலி இருக்கும் போதினிலே - நீ
ரேடி யோவைத் தானே கேட்கின்றாய்
கால் சட்டை அணியாமல் - நீ
சிலுவாரைத் தேடி அலைகின்றாய்
தமிழ்ச்சொல் சிரமம் என்றாயே - நீ
இங்லிஷ் ஈஸி நினைக்கின்றாய்
கணினி என்ற அருஞ்சொல்லிருக்கு - நீ
கம்ப்யூட்டரிலே மோகம் கொள்கின்றாய்
மொழியில் கலப்பு செய்யாதே - தமிழ்
மொழியில் பிறமொழி சேர்க்காதே!!

1 comments:
தமிழின் அழகை சித்தரிக்கும் கவிதை...
நன்று... :)
Post a Comment