உங்கள் இரசிகன்

அன்புள்ள தந்தையே
உங்களை நான் என்றும் நேசிக்கின்றேன்
ஏனென்றால் நீங்கள் தான் என் அன்பானவர்
ஆனால் நீங்கள் அதற்கும் மேலானவர்

நான் சொல்வதை நீங்கள் கவனித்தீர்கள்
என் மீது அதிக அக்கறை செலுத்தினீர்கள்
உங்கள் ஞானத்தால் எனக்குப் பல
அறிவுரைகளைச் சொன்னீர்கள்
எப்பொழுதும் எனக்கு உற்றத்
தோழனாய் கை கொடுத்தீர்கள்

எனக்கொரு பிரச்சினை என்றால்
உதவ முன் வந்தது நீங்கள் தான்
பல யோசனைகளைச் சொல்லி
சிக்கல்களில் இருந்து என்னை
மீட்டெடுத்தவரும் நீங்கள் தான்
நீங்கள் என்றுமே போற்றத் தக்கவர்
எப்பொழுதும் உங்கள் இரசிகன் நான்

Read Comments