மறைந்தாள்

வானவில் போல் ஏழு வண்ணமாய் - என்
வாழ்க்கை என்னும் வாசலில் தோன்றி நிற்கிறாய்..
கொள்ளை அழகு மொத்தமும் உன்னில் காண்கிறேன் - நீ
கொல்லைக் கொண்ட என் மனதும் உன்னில் காண்கிறேன்..
அள்ள அள்ளக் குறையாத அன்பைக் காண்கிறேன் - நீ
ஆசையாய் கொடுத்த முத்தம் எண்ணிப் பார்க்கிறேன்..

எண்ணிலடங்கா இன்ப அலைகள் உன்னில் காண்கிறேன் - என்
உறக்கம் தொலைத்த நாட்கள் இங்கே எண்ணிப் பார்க்கிறேன்..
கண்ணைப் பறிக்கும் உன்னை நானோ பறிக்க நினைக்கிறேன் - நீ
பாதி வழியில் என்னை விட்டு மறைந்து போனதேன்?!?!

Read Comments

வதைத்தவள்

மூன்றெழுத்தில் என்னை முழுமையாய் சிதைத்தவளே
முழுநிலவாய் உன் முகம் லாட்டி வதைத்தவளே
மலரும் காலை உன் காலடியில் மலரும் பூக்களாய்
முடியும் வேளை உன் பாதம் தொட்டப் பூமழையாய்
மனதில் செதுக்கினேன்....
உன்னை உயிரில் கலக்கிறேன்....
விழியினில் விதைக்கிறேன்....
உன்னோடு மேகக் கூட்டமாய் மிதக்கிறேன்....
இருந்தாலும் நீ பறந்ததேன்?!
என்னை விட்டுப் பிரிந்ததேன்?!

Read Comments