நண்பேன்டா!!

நண்பேன்டா என்றொருவன்
நேசத்தைக் காட்டினானே
பண்பான மொழிதனிலே
பாசத்தை ஊட்டினானே
வீண் வம்பு வேண்டாமென
வீணரைத் துரத்தினானே
தூண்போல அவனும் நின்று
தொல்லை பல போக்கினானே!!!!

மற்றவர் போல் அல்லாமல்
மனத்தில் அன்பு கொண்டானே
உற்றத் தோழனாய் என்றுமே
உறவினன் போலவன் ஆனானே
குற்றந்தனைக் கண்டுகொண்டு
குறைத்திடவும் முயன்றானே
போற்றத்தக்கத் தோழனாக
பெருமையுஞ் சேர்த்தானே!!!!

Read Comments

எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்!!

அன்புள்ள ஆசிரியனே
அறிவுரைகள் நீ எனக்கு
அக்கறையாய் எடுத்துரைத்தாய்!!

அனுபவங்கள் பல சேர்த்து
ஆலோசனைகள் வழங்கிச் சென்றாய்!!

இன்பத் தமிழ் பயிற்றுவித்தாய்!!

இனியக் கதை கற்றுத் தந்தாய்!!

ஈன்றத் தாயைப் போலுனக்கு
ஈவிரக்கம்; சேர்த்தளித்தாய்!!

உறக்கங்கள் பல கடந்து
உண்மைகளைப் புரிய வைத்தாய்!!

ஊருடன் கூடி வாழ் என்று
என்றென்றும் வலியுறுத்தி
என்னை உயர்த்தினாய்!!

எளிமையைக் காட்டினாய்!!

ஏற்றமிகு வாழ்வொன்று
எண்ணினால் தான் கிடைக்குமென
ஏங்க வைத்தாய்!!

என்னை எண்ண வைத்தாய்!!

ஐயங்கள் பல களைத்தாய்!!

அறிவியலும் கற்றுத் தந்தாய்!!

ஒப்பற்ற திருக்குறளை
ஓதாமல் ஒருநாளும்
ஒழுக்கங்கள் கற்றுக்கொள்ள
ஒருபோதும் முடியாதென
ஒவ்வொன்றாய் அறிய வைத்தாய்!!

ஔவை சொன்ன
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி
அனைத்தையும் உணர வைத்தாய்!!

எப்போதும் நினைத்துப் பார்ப்பேன்
உந்தன் பணியையே!!

ஆயுள் அர்ப்பணிப்பையே!!!!

Read Comments

நீங்காத நினைவுகள்..

எனக்கு இன்னும் நினைவிருக்கு
என்றும் என் நினைவில் இருக்கும்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை
எனக்காக நீ துன்பப்பட்டது

எனக்கு இன்னும் நினைவிருக்கு
முன்பு நீ நிறைய அழுதிருக்கிறாய்
எனக்கு இன்னும் நினைவிருக்கு
முன்பு நீ நிறைய அர்ப்பணித்திருக்கிறாய்

எனக்கு இன்னும் நினைவிருக்கு
முன்பு நீ ரொம்ப தைரியசாலி
என்னை மனிதநேய மனிதனாக வளர்த்தெடுத்தாய்

எனக்கு இன்னும் நினைவிருக்கு
முன்பு நீ கடுமையாக உழைத்தாய்
எனக்கு நல்ல கல்வியைக் கொடுப்பதற்கு

எனக்கு இன்னும் நினைவிருக்கு
முன்பு நீ எனக்கு அன்பை ஊட்டினாய்
பண்புள்ள மானிடனாய் வளர்வதற்கு

எனக்கு இன்னும் நினைவிருக்கு
அவ்வளவு சீக்கிரம் மறந்திட மாட்டேன்
உன் பற்றுக்கு ஈடு செய்ய முடியாது
முழுமையாக ஈடு செய்ய முடியாது
உன் தியாகத்தை

அம்மா......!!!!!!!!
எனக்கு இன்னும் நினைவிருக்கு
கோடி நன்றியை உரித்தாக்குகிறேன்
தொடர்ந்து உச்சரித்துக் கொண்டிருப்பேன்
என் ஆயுட்காலம் முடியும் வரை

எனக்கு இன்னும் நினைவிருக்கு
கள்ளங்கபடமில்லா உன் அன்பு
தூய மனம் கொண்ட உன் அன்பு

Read Comments

அழியாச் செல்வம்!!

அம்மா என்ற சொல்லினிலே
அர்த்தங்கள் ஆயிரம் கண்டேனே..
அன்னையின் மடியில் சாய்கையிலே
அழியாச் செல்வம் கொண்டேனே..

அதரத்தில் உதிரும் மொழியினிலே
அறிவின் ஊற்றைக் கண்டேனே..
அரவணைக்கும் உந்தன் கைகளிளே
அன்பின் வெள்ளம் கொண்டேனே..

அழகு உள்ளம் கொண்டவளே
அகத்தின் மென்மையும் கண்டேனே..
அகிலம் போற்றும் தாயவளே
அனைத்தும் உன்னில் கொண்டேனே..

Read Comments

பொங்கட்டும் பொங்கல்

பொங்கட்டும் பொங்கல்
பெருகட்டும் மகிழ்ச்சி
மிஞ்சட்டும் நலங்கள்
விஞ்சட்டும் இன்பம்
தங்கட்டும் நன்மைகள்
மங்கட்டும் தீமைகள்
நிலவட்டும் நல்லது
நீங்கட்டும் தீயது
நிறையட்டும் நிம்மதி
நீளட்டும் வாழ்நாள்
பொங்கட்டும் பொங்கல்
பொங்கட்டும் மகிழ்வெங்கும்

Read Comments

கையில் வருவாயோ...!

நீல வண்ண வானமே..
நீண்டு எங்கோ செல்கின்றாய்!
நீரும் உந்தன் வண்ணமே..
நீயும் உடன் செல்கின்றாய்!

எட்டி எட்டித் தொட்டேனே..
எங்கே நீயும் இருக்கின்றாய்!
இரவு வேளை பார்த்தேனே..
இருளில் சூழ்ந்து கிடக்கின்றாய்!

மலையில் ஏறி வந்தேனே..
மேலும் உயரே போகின்றாய்!
மலைத்து நானும் நின்றேனே..
முடிவாய் என்ன சொல்வாயோ?!

Read Comments

அவள்போலே பெற்றதென்ன?!

தென்றலிலே அசைந்தாடி
தேமதுர ஓசைத்தந்து
மின்னொளிரும் உருவினிலே
மிஞ்சுகின்ற மென்மையிலே
வண்ணமலர்க் கோலமென்ன!

இத்தனை வகைகளாய்
எத்தனை நிறங்களாய்
எத்தனை உருவங்களாய்
அழகான இயற்கைத்தாய்
அவள்போலே பெற்றதென்ன!

நித்தமும் நினைவூட்டும்
நிலையான மகிழ்ச்சிதனை
எப்படித்தான் புகழ்வதுவோ
எழிமலர்கள் கொள்ளைதனை
இனிமையாய்க் கண்டாலென்ன?!

Read Comments