அழியாச் செல்வம்!!

அம்மா என்ற சொல்லினிலே
அர்த்தங்கள் ஆயிரம் கண்டேனே..
அன்னையின் மடியில் சாய்கையிலே
அழியாச் செல்வம் கொண்டேனே..

அதரத்தில் உதிரும் மொழியினிலே
அறிவின் ஊற்றைக் கண்டேனே..
அரவணைக்கும் உந்தன் கைகளிளே
அன்பின் வெள்ளம் கொண்டேனே..

அழகு உள்ளம் கொண்டவளே
அகத்தின் மென்மையும் கண்டேனே..
அகிலம் போற்றும் தாயவளே
அனைத்தும் உன்னில் கொண்டேனே..

Read Comments

1 comments:

சந்தானலட்சுமி said...

ஐந்து A (அ) என்ன.....
ஆறு A (அ) வே கொடுக்கலாம் இந்த கவிதைக்கு......
அம்மா.
அன்பு..
அழகு...
அறிவு....
அரவணைப்பு.....
அருமை......அய்யா <3
:)