Labels: இயற்கை, கையில் வருவாயோ, வானம் | at 10:31 PM
நீல வண்ண வானமே..
நீண்டு எங்கோ செல்கின்றாய்!
நீரும் உந்தன் வண்ணமே..
நீயும் உடன் செல்கின்றாய்!
எட்டி எட்டித் தொட்டேனே..
எங்கே நீயும் இருக்கின்றாய்!
இரவு வேளை பார்த்தேனே..
இருளில் சூழ்ந்து கிடக்கின்றாய்!
மலையில் ஏறி வந்தேனே..
மேலும் உயரே போகின்றாய்!
மலைத்து நானும் நின்றேனே..
முடிவாய் என்ன சொல்வாயோ?!
2 comments:
"எட்டி எட்டித் தொட்டேனே..
எங்கே நீயும் இருக்கின்றாய்!
இரவு வேளை பார்த்தேனே..
இருளில் சூழ்ந்து கிடக்கின்றாய்!"
நிலா இல்லா வானம் அது,
இருளில் சூழ்ந்துதானே இருக்கும்??..
தங்கள் கவிதைக்கு "நிலா" ஒன்றை சேர்த்து பாருங்கள், ஐயா..
வானமென்ன??..
ஆகாயமே கையில் வரும்..
;);)
கவிதை மிக சிறப்பு.. :)
Post a Comment