திருக்குறள்
குறளைப் படித்து வாழ்ந்தால் - உலகில்
குறைகள் ஏதும் நமக்கில்லை
அறிவை வளர்க்கும் குறளை - நாளும்
அறிந்து கொண்டால் துன்பமில்லை
அடிகள் எல்லாம் வெற்றிப் படிகள்
படிக்கப் படிக்க முத்து மணிகள்
அழியாச் செல்வம் தமிழ்மறையே - தமிழன்
மடியில் தவழும் முக்கனியே
புகழை மலரவைக்கும் விதை - தமிழர்
வாழ்வை ஒளிரவைக்கும் கவிதை
வள்ளுவர் வழியில் செல்வோம் - தமிழ்க்
கொள்கை தனிலே சிறப்போம்

1 comments:
திருக்குறளை இவ்வளவு அழகாகப் பாடியுள்ளீர்கள்.. வாழ்த்துகள்..
Post a Comment