நண்பேன்டா!!

நண்பேன்டா என்றொருவன்
நேசத்தைக் காட்டினானே
பண்பான மொழிதனிலே
பாசத்தை ஊட்டினானே
வீண் வம்பு வேண்டாமென
வீணரைத் துரத்தினானே
தூண்போல அவனும் நின்று
தொல்லை பல போக்கினானே!!!!

மற்றவர் போல் அல்லாமல்
மனத்தில் அன்பு கொண்டானே
உற்றத் தோழனாய் என்றுமே
உறவினன் போலவன் ஆனானே
குற்றந்தனைக் கண்டுகொண்டு
குறைத்திடவும் முயன்றானே
போற்றத்தக்கத் தோழனாக
பெருமையுஞ் சேர்த்தானே!!!!

Read Comments

5 comments:

Unknown said...

kavitai sirappaga ullathu..bt nadamurayil apadi oru nanbanai kanbathu aritilum arithu..

இரா. சிவா said...

இருக்கின்றனர்... ஒரு சிலர் மட்டுமே... அந்த நல்ல மனம் கொண்ட தோழருக்காக எழுதியது....

கோ. கண்மணி said...

சறுக்கிடும் நேரம் கைகொடுப்பவன் நண்பன்...
கைவிடுபவன் !!??
ஆமாம் திருத்த முடியாதது என்றால் விட்டுவிடலாம்!! தவறில்லை!!

கோ. கண்மணி said...

உறவினன் போலவன் என்றானே...
கடையிசியின் செய்த உதவியை நினைத்துப் பார் என்றானே !!!
உப்பிட்டவரை உள்ளளவும் நினை என்று !!!!!

நினைத்திருப்பேன்! நினைவில் நிறுத்தியிருப்பேன்!
நினைவு உள்ளவரை !

வெறும் உதவி என்ற எண்ணம் மட்டுமே இருப்பின்,....
கோடி முறை நன்றி கூறுகிறேன் !
நன்றி ! நன்றி ! நன்றி !

கோ. கண்மணி said...
This comment has been removed by the author.