எழுத்தறிவித்தவன் இறைவன் ஆகும்!!

அன்புள்ள ஆசிரியனே
அறிவுரைகள் நீ எனக்கு
அக்கறையாய் எடுத்துரைத்தாய்!!

அனுபவங்கள் பல சேர்த்து
ஆலோசனைகள் வழங்கிச் சென்றாய்!!

இன்பத் தமிழ் பயிற்றுவித்தாய்!!

இனியக் கதை கற்றுத் தந்தாய்!!

ஈன்றத் தாயைப் போலுனக்கு
ஈவிரக்கம்; சேர்த்தளித்தாய்!!

உறக்கங்கள் பல கடந்து
உண்மைகளைப் புரிய வைத்தாய்!!

ஊருடன் கூடி வாழ் என்று
என்றென்றும் வலியுறுத்தி
என்னை உயர்த்தினாய்!!

எளிமையைக் காட்டினாய்!!

ஏற்றமிகு வாழ்வொன்று
எண்ணினால் தான் கிடைக்குமென
ஏங்க வைத்தாய்!!

என்னை எண்ண வைத்தாய்!!

ஐயங்கள் பல களைத்தாய்!!

அறிவியலும் கற்றுத் தந்தாய்!!

ஒப்பற்ற திருக்குறளை
ஓதாமல் ஒருநாளும்
ஒழுக்கங்கள் கற்றுக்கொள்ள
ஒருபோதும் முடியாதென
ஒவ்வொன்றாய் அறிய வைத்தாய்!!

ஔவை சொன்ன
ஆத்திசூடி, கொன்றை வேந்தன், நல்வழி
அனைத்தையும் உணர வைத்தாய்!!

எப்போதும் நினைத்துப் பார்ப்பேன்
உந்தன் பணியையே!!

ஆயுள் அர்ப்பணிப்பையே!!!!

Read Comments

2 comments:

சந்தானலட்சுமி said...

உயிரெழுத்தை முதலெழுத்தாய் வைத்து
எழுதிய கவிதை (ஆசிரியருக்கு),

உயிரையே முதலாய் வைத்து
எழும்பிய கனவை (அனைத்து சிறுவர்களுக்கும்)...

நன்று ஐயா...

R.GOMATHY said...

சிறப்பு